Author name: Rajesh Vairapandian

கதவுகள்

கதவுகள்   1. இன்றிலிருந்து அடுத்த ஏழு நாட்களுக்கு தான் மொபைல் போன் உபயோகப்படுத்துவதில்லை என முகநூலில் பதிவிட்டு #டிஜிட்டல்டிடாக்ஸிங் என்றொரு டேக்கையும் கொடுத்துவிட்டு இது தன்னால் சாத்தியமா என இருநிமிடம் யோசித்தாள் செளமியா. தொடர்ச்சியான அலைபேசி உபயோகத்தால் ஏற்படும் தூக்கமின்மையும், எதற்கென்றே தெரியாமல் படுக்கையில் படுத்துக்கொண்டே ஸ்கோரல் செய்தபடி சமூக ஊடகங்களில் உலாவுவதும் அவளுக்குள் ஒருவித அயர்ச்சியைத் தந்திருந்தது. ஸ்மார்ட் போன் வருவதற்கு முன்பான காலத்தில் தானொரு தீவிர வாசிப்புக் கொண்ட பெண்ணாக இருந்ததும் அந்த […]

கதவுகள் Read More »

ஜடேஜாவைக் காதலித்தவள்

ஜடேஜாவைக் காதலித்தவள்         1. கண்மணியின் அப்பா கழுதைகளைப் பத்திக்கொண்டு வாய்க்காலுக்குப் போனதும் அவளது அம்மா சலவைத் துணி எடுக்க கிளம்பிவிடுவாள். இருவரும் போனதும் கண்மணியின் உலகம் திறந்துகொள்ளும். அவளது வீட்டிற்கு எதிரே இருக்கும் புளியந்தோப்பில் அவளை விட வயதில் சிறியவர்களுடன் விளையாடுவாள். எறிபந்து, பிள்ளையார்பந்து, கோலி, நொண்டி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டுகளால் அவளது பொழுதுகள் நிறைந்திருந்தன. அவள் போகுமிடமெல்லாம் அவளுடனே ஓடும் அவளது நாய் செவலை.   ஒரு

ஜடேஜாவைக் காதலித்தவள் Read More »

watercolor, eye, look-7993918.jpg

சித்திரைப்பூ

சித்திரைப்பூ   1. இப்படி ஒரு விடியலிருக்கும் என்று சித்திரைப்பூ நினைத்துப்பார்க்கவில்லை. அதிகாலை ஐந்து முப்பதுக்கு மொபைல் அலாரம் அடித்தபோது எழுந்தவள் மொபைல் டேட்டாவை உயிர்ப்பித்ததும் முகநூலுக்குள் நுழைந்து சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருப்பது வழக்கம். இன்றும் அப்படித்தான் நுழைந்தாள். அங்கே பகிரப்பட்டிருந்த ஓர் அறிக்கை அவளை உலுக்கிவிட்டது. சடாரென்று படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தவள் முழுவதுமாக அந்தப் பதிவை வாசிக்கத் துவங்கினாள்.   “இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவெனில் பத்து வருடங்களுக்கு முன்பு எனக்கு நடந்த கொடூரம்

சித்திரைப்பூ Read More »

பாதங்கள்

பாதங்கள் 1. அலை நனைக்கும் தன் பாதங்களையே பார்த்துக்கொண்டு வெகு நேரம் நின்றிருந்தாள் வெண்மதி.    பரந்து கிடக்கும் கடல் தன் அலைக்கரங்களால்  இவளது பாதங்களை  முத்தமிட்டுச் செல்வது போலிருந்தது.  இரண்டு வருடங்களுக்கு முன் இதே கடற்கரையில் அழுதுகொண்டே தான் நின்றிருந்ததும் அந்த கண்ணீர் நாளுக்குப் பின் தன் வாழ்வு மாறிப்போனதிற்கு இந்தக் கடலின் ஆசிதான் காரணம் என்பதையும் தீவிரமாக நம்பினாள். எவ்வளவு மாற்றங்கள். எல்லாம் மிகப்பெரியதொரு கனவு போலிருந்தது. தன் கைப்பையிற்குள் சிணுங்கிய ஐபோனை எடுத்துப்

பாதங்கள் Read More »

Patti

சின்னக்கிளி.குட்டியப்பன்

சின்னக்கிளி.குட்டியப்பன்   1. ஆச்சி பேசுவதே அபூர்வம்.    அவளுக்கென இருக்கும் நார்க்கட்டிலை மாட்டுக்காடிக்கு அருகே போட்டுக்கொண்டு அதில்தான் முழுநேரமும் கிடப்பாள். அவர்கள் வீட்டின் பசுமாட்டையும் கன்னுக்குட்டியையும் எந்நேரமும் பார்த்துக்கொண்டிருப்பாள். கன்னுக்குட்டியை கட்டியிருக்கும் இடத்திற்கு அருகிலேயே பஞ்சாரம் இருக்கும். பழுப்பும் வெண்மையும் கலந்த கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியுடன் மேய்ந்துவிட்டு கருக்கலில் பஞ்சாரத்தின் அருகில் வந்து சூழ்ந்து நின்று கொள்ளும். பெயர்த்தி இருவாட்சிதான் குருணையை பஞ்சாரத்தின் அருகே தினம் இருமுறை தூவி விடுவாள். குஞ்சுகள் தின்றது போக மிச்சமிருக்கும் குருணையை

சின்னக்கிளி.குட்டியப்பன் Read More »

ரயிலில் பயணிக்கும் பெண்

ரயிலில் பயணிக்கும் பெண்   1. முப்பத்தாறு மணிநேர ரயில் பயணம். முதலாம் வகுப்பு குளிரூட்டப் பட்ட பெட்டியில் இருவர் மட்டுமே பயணிக்கும் கூபே வகை கம்பார்ட்மெண்ட்டில் நானும் மற்றொரு பெண்ணும். அவள் யார்? தெரியாது. அவளுக்கும் எனக்குமான இடைவெளி வெகுசில அடிகள் மட்டும். அருகருகே அமர்ந்திருக்கிறோம். ரயில் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பிவிடும். எனக்கு அப்பர் பெர்த். அவளது உடலிலிருந்து புதுவித வாசனையொன்று வீசிக்கொண்டிருந்தது. காட்டுப்புஷ்பங்களின் வாசனையோ என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் அதன் வாசம்

ரயிலில் பயணிக்கும் பெண் Read More »

waves, sea, ocean-3473335.jpg

கடல் என்பது மிகப்பெரும் சிறை

கடல் என்பது மிகப்பெரும் சிறை மீன்கள் பாடுவதை கேட்டிருக்கிறாயா அவை தனித்தனியாகவும் மொத்தமாகவும் சேர்ந்து பாடுவதை நான் கேட்டிருக்கிறேன் அந்தப் பாடல்கள் அனைத்திலும் வானமும்  மின்னும் நட்சத்திரங்களும் மங்கிய நிலவும் தவறாமல் இடம்பெற்றிருக்கும் ரகசியத்தை உனக்குச் சொல்லவா? ஏன் எந்தவொரு பாடலிலும்  கடலும் அலையும் ஆமைகளும் நண்டுகளும் இல்லை என்பதறிவாயா? பன்னெடுங்காலமாய் மீன்களின் விறைத்த பார்வையின் காரணம் யோசித்திருக்கிறாயா? இல்லை. மீன்கள் பாடுவதையே நான் கேட்டிராதபோது அந்தப் பாடல்களின் அர்த்தம் எனக்கெப்படித் தெரியும்? நீயே அதன் காரணத்தையும்

கடல் என்பது மிகப்பெரும் சிறை Read More »

கொண்டலாத்தி

கொண்டலாத்தி   1.   “யழவு எப்பவும் பயலுககூட கெடந்துட்டு இப்படித் தனியா கெடந்தா கோட்டி பிடிச்சுத்தான் சாவணும் போல”  அடிக்கடி புலம்புவான். ஆனாலும் வேறு வழியில்லை. பி.பி.ராஜன் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.  பி.பி.ராஜன் என்று சொல்லக்கூடாது பட்டத்து பழனிராஜன் என்று சொன்னால்தான் அவனுக்குப் பிடிக்கும். அன்று காலை விழித்தவுடனே கல்லூரியின் பின்னாலிருக்கும் மரங்கள் அடர்ந்த இடத்திற்கு போய் பருத்த மரத்தடியொன்றில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டான். ஐம்பது அறுபது வேப்பமரங்களாவது இருக்கும்.  கல்லூரி விடுதியில்தான் தங்கியிருந்தான்.அறை

கொண்டலாத்தி Read More »

அறல்

அறல் 1. கடுமையான குளிர். இவ்வளவு குளிரை இதற்கு முன் நான் உணர்ந்ததேயில்லை. உடல் கொஞ்சம் கொஞ்சமாய் விறைத்துக்கொண்டிருந்தது. இருள் சூழந்திருக்கும் இந்த அறைக்குள் நான் எப்படி வந்திருப்பேன் என்பதும் எனக்கு ஞாபகமில்லை. மீண்டும் மீண்டும் யோசித்துப் பார்த்தேன். சதுர வடிவ தொட்டிக்குள் என்னை யாரோ தள்ளிவிட்டதைப் போன்றதொரு உணர்வு. கனவு போலிருக்கிறது. ஏன் இந்த அறை இவ்வளவு அடர்த்தியான இருளால் சூழப்பட்டிருக்கிறது? ஏனிந்த பேரமைதி? விடை தெரியாத கேள்விகளால் குழம்பிப்போயிருந்த கணம் யாரோ முதுகிற்கு பின்னாலிருந்து

அறல் Read More »

Scroll to Top