ராஜேஷ் வைரபாண்டியன்
ராஜேஷ் வைரபாண்டியன் நவம்பர் 23, 1980-ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாயர்புரம் எனும் சிற்றூரின் அருகிலுள்ள நடுவைக்குறிச்சியில், வைரபாண்டியன் – சுதந்திர உதயம் இணையருக்கு பிறந்தார்.
சாயர்புரத்திலுள்ள போப் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் கணிப்பொறி இளநிலைப் பட்டப்படிப்பையும், சென்னை சத்தியபாமா பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ. பட்டத்தையும் பெற்றார்.
“ராஜேஷ் வைரபாண்டியன் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வருகிறார் .”
இலக்கிய வாழ்க்கை
ராஜேஷ் வைரபாண்டியனின்படைப்புகள் ஆனந்த விகடன், உயிர்மை, கல்கி, புன்னகை, அகநாழிகை, நவீன விருட்சம், உயிர்எழுத்து, கல்குதிரை, கொம்பு, சிலேட் போன்ற இதழ்களிலும், கீற்று, கூடல்திணை, வாசகசாலை, நுட்பம், திண்ணை போன்ற இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
இலக்கிய இடம்
இலக்கிய விமர்சகர் சரவணன் மாணிக்கவாசகம், ராஜேஷ் வைரபாண்டியனின் ‘தேரி’ நாவலைக் குறித்து எழுதிய விமர்சனத்தில், தேரி நிலத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதும், தூத்துக்குடி வட்டார வழக்கின் இயல்பான பயன்பாடும் நாவலின் முக்கிய சிறப்பம்சங்களாகக் குறிப்பிடுகிறார்.
விருதுகள்
- புன்னகை இலக்கிய விருது (2012)
- உயிர்மை சுஜாதா சிற்றிதழ் விருது (2011)
- உயிர்மை சுஜாதா கவிதை விருது (2018)
- பிரமிள் கவிதை விருது (2018)
- ஸீரோ டிகிரி இலக்கிய விருது (2023)
நூல்கள்
- கவிதைத் தொகுப்புகள்
- சிறுகதைத் தொகுப்புகள்
- குறுநாவல்கள்
- நாவல்கள்
- சிற்றிதழ்கள்
நூலாசிரியர்கள்
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகிய வடிவங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.