ஐந்திணை நிலங்களான குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலையை மையமாகக் கொண்டு எண்ணற்ற புதினங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலப்பரப்பான “தேரி”யை மையப்படுத்தி வெளியான புதினங்கள் தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவானவை. அவ்வகையில் ராஜேஷ் வைரபாண்டியனின் “தேரி” நாவல், தேரியின் செம்மண் நிலப்பரப்பிலும் தேரியைச் சுற்றியிருக்கும் கரிசல் மண்ணிலும் நடக்கும் இரண்டு தலைமுறைக் கதையை தேரி மண்ணின் வெக்கையுடனும் கரிசல் மண்ணின் ஈரத்துடனும் வாசிப்பவர் மனதில் தனித்துவமானதொரு சித்திரத்தை தீட்டிச் செல்கிறது.