புதிது

தேரி - நாவல்

ஐந்திணை நிலங்களான குறிஞ்சி,முல்லை, மருதம்,நெய்தல்,பாலையை மையமாகக் கொண்டு எண்ணற்ற புதினங்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலப்பரப்பான “தேரி”யை மையப்படுத்தி வெளியான புதினங்கள் தமிழ் இலக்கியத்தில் மிகக் குறைவானவை. அவ்வகையில் ராஜேஷ் வைரபாண்டியனின் “தேரி” நாவல், தேரியின் செம்மண் நிலப்பரப்பிலும் தேரியைச் சுற்றியிருக்கும் கரிசல் மண்ணிலும் நடக்கும் இரண்டு தலைமுறைக் கதையை தேரி மண்ணின் வெக்கையுடனும் கரிசல் மண்ணின் ஈரத்துடனும் வாசிப்பவர் மனதில் தனித்துவமானதொரு சித்திரத்தை தீட்டிச் செல்கிறது.

தேரி நாவல் அட்டை முகப்பு

தேரி நாவல் விமர்சனப் போட்டி முடிவுகள் - 2023

வெற்றி பெற்றவர்கள் விபரம்

நண்பர்களுக்கு வணக்கம்.

தேரி நாவல் விமர்சனப் போட்டிக்கான முடிவுகளை இன்று(15-08-2023) வெளியிடுவதில் மகிழ்கிறோம்.

நிறைய விமர்சனங்கள் வந்திருந்தன. அவற்றிலிருந்து ஏற்கனவே அறிவித்திருந்தபடி முதல் மூன்று பரிசுகளுடன்

சிறப்பு பரிசாக நான்கு விமர்சனங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

வெற்றி பெற்றவர்களின் விபரம்:

முதல் பரிசு – அஜய் சுந்தர் – ஐபோன் பரிசு – செப்டம்பரில் ஐபோன்15 வெளியானவுடன் வழங்கப்படும். மற்றும் ரூ.3000 மதிப்புடைய 2010ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான சமகால எழுத்தாளர்களின் நூல்கள்.

இரண்டாம் பரிசு – க.அம்சப்ரியா – கிண்டில் ரீடர் – இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும். மற்றும் ரூ.2000 மதிப்புடைய 2010ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான சமகால எழுத்தாளர்களின் நூல்கள்.

மூன்றாம் பரிசு – வருணன் – ரூ.5000 மதிப்புடைய 2010ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான சமகால எழுத்தாளர்களின் நூல்கள்.

சிறப்பு பரிசுகள்:

வடிவேல் முருகன், கவின் பாரதி, மலர்விழி,இளையவன் சிவா   – நால்வருக்கும் ரூ.1000 மதிப்புடைய 2010ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான சமகால எழுத்தாளர்களின் நூல்கள் வழங்கப்படும்.

வெற்றி பெற்றவர்களுக்கும் ஆர்வமுடன் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி. விமர்சனங்கள் நடுவர் குழு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. தங்களது நேரத்தை போட்டிக்காக ஒதுக்கித் தந்த நடுவர் குழுவுக்கு பேரன்பு.

போட்டியில் வெற்றி பெற்ற விமர்சனங்கள் இங்கே வாசிக்கலாம்.

அன்பும் நன்றியும்,

-ராஜேஷ் வைரபாண்டியன்

நாவல் வாங்க விரும்புவோர் கீழேயிருக்கும் Buy Now பட்டனை அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆசிரியரைப் பற்றி

ராஜேஷ் வைரபாண்டியன்,  தூத்துக்குடி மாவட்டத்திலிருக்கும் சாயர்புரம் எனும் ஊரின் அருகேயிருக்கும் நடுவைக்குறிச்சியை சேர்ந்தவர். நிலாரசிகன் என்கிற புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, கட்டுரை மற்றும் விமர்சனங்களை 2018 வரை எழுதி வந்தார். அதன் பின்னர் தன் சொந்தப் பெயரில் எழுதி வருகிறார்.  தகவல் தொழில் நுட்பத்துறையில் பணிபுரிந்து வரும் இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இரண்டுமுறை “சுஜாதா விருது” பெற்றிருக்கிறார். ஈர்ப்பு விதியை(Law of Attraction) மையப்படுத்தி ஐந்து நூல்கள் எழுதி இருக்கிறார். “தேரி’ இவரது முதல் நாவல்.

ராஜேஷ் வைரபாண்டியன்
கவிஞர், எழுத்தாளர்

இதர புத்தகங்கள்

இங்கு விரைவில்...

காத்திருப்போம்…

தேரி நாவல் அட்டை முகப்பு
தேரி நாவல் அட்டை முகப்பு

முதன்மை வாசகர்களின் விமர்சனம்

அவர்களின் மொழி வடிவிலேயே தரப்பட்டுள்ளது. 

தேரி நாவலில் என்னை அதிகம் கவர்ந்தது வெட்சியின் கதாப்பாத்திரம். இப்படி ஒரு பெண்ணா என நம்மை வியக்க வைத்த நாவலாசிரியர் இப்படியும் ஒரு பெண்ணா என செவ்வந்தியைப் பற்றி யோசிக்கவும் வைத்துவிடுகிறார். பேரன்பின் தருணங்களும் தவறொன்றின் இயலாமையையும் கலந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் நம்மை தன் வசீகர எழுத்தால் ஈர்க்கிறார்.

கெளசிகா ஶ்ரீனிவாசன்

கணிப்பொறி வல்லுநர்

தேரி நாவல் இரண்டு காலங்களின் வாழ்வியலை நம்முன்னே தோலுரித்துக் காட்டுகிறது. கரிசல் மற்றும் தேரி மண்ணின் மொழி நடையில் பயணித்திருப்பது எனது இளவயது பிராயத்திற்கு கொண்டு சென்றது. செவ்வந்தியும் வெட்சியும் எதிர்முனைப் பிம்பங்களாய் விருட்சமிட்டு, கானல்நீராய் கரைகின்றார்கள். எதார்த்தங்கள் அழகாய் முன்னிறுத்தப்படுகிறது இந்நாவலெங்கும்.

ராஜலிங்கம் ரத்தினம்

கவிஞர், எழுத்தாளர்

தேரி எனும் செம்மண் பூமியின் வளத்தையும் அந்நில வாழ் மக்களின் மனத்தையும்‌ மணத்தையும் அழகாக எடுத்துரைக்கின்றது இந்நாவல். கதைக் களத்தில் இருந்து வாழ்கின்ற‌ ஓர் உணர்வை ஏற்படுத்தியது. தேரியின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையினைப் போலிருப்பது இந்நாவலின் தனித்துவம்.

ஜோஸ் ஆரோக்கிய ரமோலா

இல்லம் காப்பவர்

தேரி நாவலின் மிகப்பெரிய பலம் அதன் வட்டார வழக்கு. நாவலை  வாசிக்கும் போது நாமும் அந்த ஊரில் அந்தத் தேரி மண்ணில் கதைமாந்தர்களோடு உலவும் எண்ணத்தை வர வைத்துவிடுகிறார் நாவலாசிரியர். அதுவே இந்நாவலின் மிகப்பெரும் பலமாக கருதுகிறேன். செல்லக்குட்டி எனும் சாமானியனுடன் நாமும் பயணிப்பது உறுதி. 

ராஜா சுப்பிரமணியம்

QA மேலாளர்

Scroll to Top